தமிழகத்தில் பரிதாபமாக இறந்த கேரள பெண்: கணவரே கொன்றுவிட்டதாக புகார்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் இளம்பெண் இறப்புக்குக் காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக் கோரி உறவினர்கள் பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கேரளாவை சேர்ந்தவர் வனிதா (28). இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட, அப்போதிலிருந்தே வனிதாவை கொடுமைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில், ஏப்ரல் 16-ம் திகதி உடல்நிலை சரியில்லாமல் வனிதா இறந்துபோனதாக அவர்களுடைய சொந்தக்காரர்களுக்கு சரவணன் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த வனிதாவின் உறவினர்கள், அவர் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறியதோடு, சரவணனை கைதுசெய்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

உறவினர்கள் கூறுகையில், ஃபுட் பாய்சன் காரணமாக வனிதா இறந்ததாகச் சொல்கிறார்கள். அவள் உயிருக்குப் போராடிய நிலையில், ஆம்புலன்ஸுக்குப் போன் செய்யாமல் ஆட்டோவிலேயே அலட்சியமாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே வனிதாவின் உயிர் பிரிந்திருக்கிறது.

எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் என்னுடைய கணவனை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவளை, திட்டமிட்டே கொன்றிருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்