பாலியல் விவகாரம் பற்றி கல்லூரி மாணவிகளிடம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி படத்தை, பாஜக நிர்வாகி ஒருவர் படம் என்று மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து, பாஜகவை சேர்ந்த ஜெஸ்ஸி முரளிதரனை தவறாக சித்தரித்து, பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என பரப்பி வருவதாக பாஜக ஊடக பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, ஜெஸ்ஸி முரளிதரன் பேசிய வீடியோவையும், பாஜக ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் நிர்மலா தேவி கிடையாது, ஜெஸ்சி முரளிதரன், நான் பாஜக கட்சியில் 5 வருடங்களாக உள்ளேன், திமுகவில் உள்ளவர்களுக்கு கூட என்னை தெரியும்.
எதற்காக இப்படி செய்கிறீர்கள், உங்கள் வீட்டு பெண்களை இப்படி செய்வீர்களா, சோஷியல் மீடியாவில் எடுத்து போட்டவன் ஆம்பிளையா?
அவர்கள் வீட்டில் உள்ள அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி போட்டோவை எடுத்து போடலாமே, எனது போட்டோவை ஏன் போடுகிறாய்? எனக்கு நியாயம் கிடைக்கனும்.
இதற்காக எந்த எல்லைக்கும் போவேன், எங்களுக்கு நீங்கள்தான் விளம்பர பலகை, நீங்கள் செய்து கொண்டே இருந்தாலும், நாங்கள் அச்சப்பட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.