வயதான தம்பதியர் அடித்துக் கொலை: அதிர்ச்சி காரணம்

Report Print Kabilan in இந்தியா
67Shares

தமிழகத்தில் பாக்கி தொகையை தராததால், வயதான தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டிவாக்கம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த தம்பதி மாயாண்டி, வள்ளிநாயகி. இவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், இவர்கள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த துரைப்பாக்கம் பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து தம்பதியரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமிராவை பொலிசார் ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் அப்பகுதியில் சென்றது தெரியவந்தது.

அதன் பின்னர், அந்நபரைப் பிடித்து பொலிசார் விசாரித்ததில், வயதான தம்பதியை தாம் தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார். மேலும், பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில்,

ஆலன் எனும் வடமாநிலத்தைச் சேர்ந்த அவர், மாயாண்டி வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியை செய்துள்ளார். அதற்கு முன்பணமாக மாயாண்டி சிறு தொகையை ஆலனுக்கு கொடுத்துள்ளார். பணி நிறைவடைந்ததும் பாக்கி தொகையை தருவதாக மாயாண்டி தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆலன், நேற்று இரவு மாயாண்டி வீட்டிற்கு சென்று பணத்தைக் கேட்டுள்ளார்.

பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர், மாயாண்டி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 13 சவரன் நகையை எடுத்துச் சென்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்