செல்போன் திருடிய நபருக்கு பொதுவெளியில் தரப்பட்ட தண்டனை: பதறவைக்கும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் செல்போன் திருடிய நபரை அடித்து, உதைத்து தலைகீழாக தொங்கவிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் தர்பங்கா ஹிங்கோலி கிராமத்தில் நபர் ஒருவர் அங்கிருப்பவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த நபரை பிடித்து வைத்த பொதுமக்கள் பொதுவெளியில் சரமாரியாக அடித்துள்ளனர்.

பின்னர் மரத்தில் இரும்பு சங்கிலியை கட்டி அவரை தலைகீழாக தொங்கவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்