நிர்மலா தேவியின் அடுத்த பிளான்: கடைசிநேரத்தில் காட்டிக்கொடுத்த ஆடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தற்போது தமிழகத்தை கலங்கவைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி.

இவர், அக்கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசிய ஆடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதிக மதிப்பெண் மற்றும் பணம் பெற்று தருவதாகவும், அரசு வேலைக்கு உத்தரவாதம் தருவதாகவும் கூறி பல்கலைக்கழக விவிஐபிக்கள், உயரதிகாரிகளுக்காக, சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு அவர் பேசியது மாணவிகள், பெற்றோர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவியின் வழக்கை சி.பி.சி.ஐ.டி பொலிசார் விசாரிக்கத் தயாராகி, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

இவர், அடுத்தகட்ட பிளானுக்காக காத்திருந்த சமயத்தில் தான் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

இதற்கிடையில், அவரது செல்போன்களில் உள்ள தடயங்கள், இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக மாறியிருக்கிறது. நிர்மலா தேவியுடன் நட்பில் இருந்தவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளனர்.

இதற்கெனத் தனி டீம் அமைக்கப்பட உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த வழக்கில், நிர்மலா தேவியைத் தவிர இன்னும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர்கள் யார் என்று விசாரணையையும் நடத்த உள்ளோம்.

அதே கல்லூரியில் படித்து, அங்கேயே வேலையும் பார்த்துள்ளார். இதனால், அவருக்கு கல்லூரியில் நட்பு வட்டாரம் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள்மீதும் மட்டுமே எங்களது சந்தேகப் பார்வை இருக்கிறது.

எல்லோரிடமும் சகஜமாகப் பழகிய நிர்மலா தேவியின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது. அவர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கிறார். பல்கலைக்கழகத்திலும் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு, அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்துள்ளது.

நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசும் ஆடியோவில், அவர் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதனால், இதற்கு முன்பு மாணவிகள் சர்ச்சையில் நிர்மலா தேவி சிக்கியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால், இதுகுறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்த கல்லூரியின் செயலாளர் ராமசாமியின் தகவல்கள் அனைத்தும் நிர்மலா தேவிக்கு எதிராகவே உள்ளன. குறிப்பாக, அவரது பணி, செயல்பாடுகள், மாணவிகளிடம் பழகும் விதம் என பல தகவல்களை பொலிசாரிடம் ரகசியமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்