பகிரங்க மன்னிப்பு கோரிய ஆளுநர்! இளம்பெண்ணின் பதில் இதுதான்

Report Print Fathima Fathima in இந்தியா

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியதற்காக ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆளுநர், பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன, உடனடியாக மன்னிப்பு கோர வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணும் டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய அனுமதி இல்லாமல் ஆளுநர் என் கன்னத்தை தட்டியது கோபத்தை ஏற்படுத்தியதாகவும், பலமுறை தன் கன்னத்தை கழுவியதாகவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பெண் பத்திரிக்கையாளரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் ஆளுநர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய பேத்தி என நினைத்து கன்னத்தில் தட்டினேன்,

அவர் கேட்ட கேள்வி நல்ல கேள்வியாக இருந்ததால் பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன்.

40 ஆண்டுகளாக நானும் பத்திரிக்கையாளன் தான், அவரது மனது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண் பத்திரிக்கையாளர் கூறுகையில், ஆளுநர் அவர்களே நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து நீங்கள் எழுதிய கடிதம் எனக்கு கிடைத்தது.

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் எனது கேள்விக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தான் அவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்