நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறாயா? மகளின் கழுத்தை வெட்டிய தந்தை

Report Print Santhan in இந்தியா
214Shares

தமிழகத்தில் சொந்த மகளையே தந்தை கழுத்தறுத்து கொலை முயற்சி செய்துள்ள சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வில்லிப்பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார்.

12-ஆம் வகுப்பு படித்து வரும் ராஜேஸ்வரி சிவகாசியைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

மகளின் நடவடிக்கையை கவனித்த தந்தை அவர் காதலிப்பதை கண்டுபிடித்துள்ளார். அதன் பின் அவரையும்அந்த இளைஞரையும் முனியாண்டி எச்சரித்துள்ளார்.

இதனால் இருவரும் பேசி பழகுவதை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி சமீபத்தில் தேர்வுகள் எழுதி முடித்ததால், மீண்டும் அவருடன் பேச ஆரம்பித்துள்ளார்.

அப்போது அந்த இளைஞனிடம் மாணவி எந்த கல்லூரியில் சேருவது என்பது குறித்து பேசியுள்ளார். தனது மகள் மீண்டும் அந்த இளைஞருடன் பேசுவதை அறிந்த தந்தை, ஆத்திரமடைந்துள்ளார்.

உடனே தனது மகளை கண்டித்த முனியாண்டி, நீ சொன்னால் திருந்த மாட்டாயா, நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா, நீ இனி இருக்கக்கவே கூடாது என திட்டியுள்ளார்.

ஆனால் மாணவி இவரின் பேச்சை காது கொடுத்த கேட்காத காரணத்தினால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் கத்தியை எடுத்து தனது மகளின் கழுத்தை அறுத்துள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து முனியாண்டியை தடுத்துள்ளனர். இருப்பினும் மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்