திருமணமான மூன்று நாட்களில் பணத்தாசையால் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Report Print Raju Raju in இந்தியா

அசாமில் திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண்ணை கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரீம்கஞ்சு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணமான முதல் நாளிலேயே வரதட்சணை கேட்டு மனைவியை கணவன் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் திருமணமான மூன்றாவது நாளே பணத்தாசை பிடித்த கணவன் தனது மனைவியை இரண்டு நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.

இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட புதுப்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனை மூலம் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான புகாரையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்ற இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers