எஸ் வி சேகர் மீது மீண்டுமொரு வழக்கு

Report Print Trinity in இந்தியா

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநருக்கு ஆதரவாகவும் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் நடிகர் மற்றும் பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் இழிவான ஒரு செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தார்.

அதன் மூலம் கொதிப்படைந்த பத்திரிகையாளர்கள் எஸ் வி சேகருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் பெண்களை கொச்சையாகப் பேசியதால் அவரை கைது செய்யவும் கோரி போராட்டம் நடத்தினர்.

அதில் தன் உடலை மூலதனமாக வைத்துதான் பெண்கள் முன்னேறி வருவதாக கூறியுள்ளது ஆண்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சைபர் கிரைம் மூலம் "பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட பிரிவினரை வன்முறைக்கு தூண்டுவது, தனிப்பட்ட நபர்கள் மீது அவதூறு பரப்புதல், பெண்களை இழிவுப்படுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டம்" ஆகிய நான்கு பிரிவில் அவர் மீது வழக்கு தொடரப் பட்டது.

இதற்கிடையில் திடீரென செல்போன் தொடர்பை நிறுத்தி விட்டு எஸ் வி சேகர் தலைமறைவான நிலையில் ஏற்கெனவே திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிகையாளர் சங்கத்தினர் இன்று கரூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers