எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்: நடிகர் ரஜினிகாந்த்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவாகி விட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தெரிந்து செய்தாலோ,,,தெரியாமல் செய்தாலோ எஸ்.வி.சேகர் பெண்செய்தியாளர் குறித்து முகநூலில் பதிவிட்டது மன்னிக்க முடியாத குற்றம் என கூறியுள்ளார்.

மேலும், நிர்மலாதேவி விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers