அதற்கு மறுத்ததால் கொன்றேன்: இளம் பெண்ணை கொன்ற இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் வங்கி பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் வாலிபரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கரூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வந்தவர் ரூபா (24). ரூபா தங்கியிருந்த வீட்டின் தரைத்தளத்தில் பெண் ஆடிட்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் திகதி கழுத்து அறுக்கப்பட்டு உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அறையில் இருந்து வெளிப்பகுதி வளாகத்தில் ரூபா பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடக்க காலத்தில் சிலரை பிடித்து விசாரித்தனர். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

காலப்போக்கில் பல்வேறு சூழ்நிலை காரணமாக இந்த வழக்கு அப்படியே கிடப்பில் இருந்தது.

இந்நிலையில் ரூபா கொலை வழக்கில் கொலையாளியை கைது செய்ய சில மாதங்களுக்கு முன்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த விசாரணையில் பெண் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்த மாரியப்பன் (25) ரூபாவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் மாரியப்பனை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் ஆடிட்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே வீட்டில் குடிவந்த ரூபா அழகில் மயங்கினேன்.

அவரை அடைய வேண்டும் என எண்ணம் எனக்கு ஏற்பட்ட நிலையில், சம்பவத்தன்று ரூபாவின் அறைக்கு இரவில் சென்றேன்.

அவரை ஆசைக்கு இணங்க நான் கூறிய நிலையில் அவர் மறுத்து சத்தம் எழுப்ப முயன்றார்.

இதையடுத்து மாட்டி கொண்டு விடுவோமோ என்ற பயத்தில் கத்தியால் ரூபாவின் கழுத்து மற்றும் உடலில் பலமாக குத்தி கொலை செய்தேன்.

ரூபா பயன்படுத்திய செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றேன். சிம்கார்டை உடைத்து நொறுக்கினேன்.

அப்போது பொலிசார் விசாரணையில் சிக்காத நான் தற்போது சிக்கி கொண்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers