நிர்மலா தேவி விவகாரத்தில் இன்னொரு முக்கிய நபர் சிக்கினார்: பொலிசார் அதிரடி

Report Print Raju Raju in இந்தியா

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், பேராசிரியர் முருகனை அடுத்து மற்றொரு பேராசிரியரும் சிக்கியுள்ளார்.

அருப்புக்கோட்டையில் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்ல முயன்ற தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையின் போது தன்னை செல்போனில் பேச தூண்டியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரது பெயர்களை நிர்மலா வெளியிட்டார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த முருகனை பொலிசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

மேலும் மற்றொரு பேராசிரியர் கருப்பசாமியை தேடும் பணியில் பொலிஸ் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து திருச்சுழி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு கருப்பசாமி வந்தபோது, சிபிசிஐடி பொலிஸ் பிடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரை கைது செய்ததாக தகவல் வெளியாகவில்லை. அவரிடம் மதுரையில் ரகசிய விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers