சிறுமி துஷ்பிரயோகம்! குற்றவாளியான பிரபல சாமியாரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Report Print Fathima Fathima in இந்தியா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 1941ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் Asumal Thaumal Harpalani ஆக பிறந்தார் ஆசாராம் பாபு.

தன்னுடைய 15வயது வயதில் லக்ஷமி தேவி என்பவரை மணந்து கொண்டார், இவருக்கு நாராயண் சாய் என்ற மகனும், பார்தி தேவி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 1970ம் ஆண்டு வாக்கில் சபர்மதி நதிக்கரையோரம் சிறிய குடிலாக தொடங்கப்பட்ட இவரது ஆசிரமம், தற்போது உலக நாடுகளில் 400 கிளைகளை கொண்டுள்ளது.

சாமியார் என்பதையும் தாண்டி, கடந்த 40 ஆண்டுகளில் அவர் உருவாக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி என்பதும், 40 மில்லியன் தொண்டர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து வழக்கு நடந்து வந்தாலும், இன்று வரை இவருக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

பாலியல் குற்றச்சாட்டுடன் பலரது நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டும் இவர் மீது எழுந்தன.

இவரது மகனும் பாலியல் குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

கடந்த 2008ம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் இளம்பெண்கள் மர்மமான முறையில் இறந்த போதே ஆசாராம் பாபு மீது புகார்கள் எழுந்தன.

எனினும் 2013ம் ஆண்டு ராஜஸ்தான் சிறுமி கொல்லப்பட்ட போது தான் பூதாகரமாக வெடித்தது.

சாமியார் மற்றும் அவரது மகனை கைது செய்த பின்னர், இரண்டு சகோதரிகள் தாங்கள் அனுபவித்த வன்கொடுமைகள் பற்றி வெளிப்படையாக பேசினர்.

இந்நிலையில் இன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சாமியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers