திருமண பரிசாக வெடிகுண்டு அனுப்பி கொலை செய்த நபர்: வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் ஒடிசாவில் திருமண பரிசாக வெடிகுண்டு அனுப்பிய விவகாரத்தில்கல்லூரி பேராசிரியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மணமகன் கொல்லப்பட்டுள்ளதுடன் மணப்பெண் படுகாயமடைந்தார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியர் Punjilal Meher கொல்லப்பட்ட மணமகனின் தாயாருடன் ஒன்றாக பணிபுரிந்து வந்ததாகவும், தமக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை கொல்லப்பட்ட மணமகனின் தாயாருக்கு நிர்வாகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த Punjilal Meher திட்டமிட்டு பழிக்கு பழி வாங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இணையத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் முறையை தெரிந்து கொண்ட Meher தனது வீட்டிலேயே வெடிகுண்டு பார்சலை தயார் செய்துள்ளார்.

பின்னர் சுமார் 230 கிலோ மீற்றர் தொலைவு ரயில் பயணம் செய்து அங்கிருந்து வெடிகுண்டு பார்சலை மணமகனின் பெயருக்கு அனுப்பியுள்ளார்.

குறித்த பார்சலானது சுமார் 650 கி.மீற்றர் தொலைவு, 3 பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்து இறுதியில் பிப்ரவரி 20 ஆம் திகதி தொடர்புடைய மணமகனிடம் வந்து சேர்ந்துள்ளது.

திருமணத்தன்று மாலை மணமகளுடன் இணைந்து பார்சலை திறந்து பார்த்த மணமகன் Soumya Sekhar Sahu(26) சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers