அரசியலுக்கு வருகிறார் நடிகர் விஜய்? ஜூன் 22-ல் முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் அறிவிப்புக்கு நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து, கொடி அறிமுகம் செய்து வழிநடத்தி வருகிறார். முழுமையான இயக்கமாக அது செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இயக்கத்தின் இணையதளம் தொடங்கப்பட்டு பலரையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 22-ல் முடிவெடுக்கிறார் விஜய் என்ற வாசகம் அதில் இடம்பெற்றிருக்கிறது.

தின விஜய் நாளேடு என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் அந்தச் சுவரொட்டிகளில் அதன் நிறுவனர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் என்றும், தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம் எனவும் மக்கள் மகிழ்ச்சி, கட்சிகள் அதிர்ச்சி, விவசாயிகள் வரவேற்பு, திரை உலகினர் வாழ்த்து என்ற பஞ்ச் வசனங்களும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers