தாலியை காப்பாற்ற நடுரோட்டில் போராடிய பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் தனலட்சுமி என்பவர் வேலை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அப்போது, தனலட்சுமியைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்துவந்த இரண்டு கொள்ளையர்கள், அவர் கழுத்தில் கிடந்த தாலிச் செயினைப் பறிக்க முயன்றனர்.

இதில் நிலைக்குலைந்த தனலட்சுமி, தாலிச்செயினை கையில் பிடித்துக்கொண்டு, கொள்ளையர்களுடன் கடுமையாகப் போராடினார்.

மேலும், கூச்சல் போட்டு அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர்.

இதைப் பார்த்த கொள்ளையர்கள், தனலட்சுமியின் செயினை மட்டும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். தாலி மட்டும் தனலட்சுமியின் கையில் இருந்தது.

இதையடுத்து, அயனாவரம் பொலிஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கமெரா பதிவுமூலம் பொலிசார் ஆய்வு செய்துவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்