மக்கள் குறைகளை தெரிவிக்க கமல்ஹாசனின் புதிய அதிரடி திட்டம்

Report Print Raju Raju in இந்தியா

மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மய்யம் விசில் ஆப் வரும் 30-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கடந்த 22-ம் திகதி யூ-டியூப் நேரலையில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

அப்போது, கிராமங்களின் குறைகளை படம் பிடித்து காட்டும் வகையில் மய்யம் விசில் ஆப் 30-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் எந்த அதிகாரியிடம் குறைகளை கொண்டு சேர்க்கவேண்டுமோ அதற்கான பணிகளை மக்கள் நீதி மய்யம் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

ஆப் அறிமுகம் செய்வதற்கான முன்னோட்டமாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிடம் 10 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers