மீண்டும் திமுகவில் இணைவது எப்போது? மு.க அழகிரி பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேட்டியளித்துள்ளார்.

மு.க. அழகிரியின் பேரனின் முதலாவது பிறந்த நாள் சென்னையில் கொண்டாடப்பட்ட நிலையில் இதில் பங்கேற்ற அழகிரி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் விமான நிலையத்துக்கு வந்து செய்தியாளர்களை அழகிரி சந்தித்தார்.

அப்போது, நீங்கள் மீண்டும் திமுகவில் இணைவீர்களா? என கேள்வியெழுப்பட்டது.

அதற்கு, கருணாநிதி அழைத்தால் திமுகவில் சேருவேன் என வேகமாக பதிலளித்தார் அழகிரி.

2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் மு.க ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers