ரூ.8 லட்சத்துக்கு மின்சார கட்டணம்: காய்கறி கடைக்காரர் எடுத்த துயர முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

மகாராஷ்டிராவில் எட்டு லட்சம் ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்ததால் மன வருத்தம் அடைந்த காய்கறி வியாபாரி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி (36).

இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவரது காய்கறி கடைக்கு மின்சார கட்டணமாக ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த மாத மின்சார கட்டணத்தை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்திருந்தது.

அதைக் கண்டதில் இருந்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். மின்சார வாரிய அலுவலகத்துக்கும் பலமுறை நடந்துள்ளார்.

ஆனால் எந்த பலனும் இல்லை. அவர்கள் அந்த தொகையை கட்டும்படி கூறிவிட்டனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், ஷெல்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், மின்சார கட்டணம் அதிகமாக வந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பொலிசார் விசாரணை நடத்தினார். விசாரணையில், மின்சார அலுவலக ஊழியர், மின்சார பயன்பாட்டு அளவில் குறித்துள்ள எண்ணில் ஒரு புள்ளியை மாற்றி வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers