சுற்றுலா படகில் தீ விபத்து: 120 பேரின் நிலை என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் 120 பேருடன் சென்ற படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் பாப்பிகொண்டலூர் என்ற இடத்துக்கு அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக படகில் பயணித்தவர்கள் அளித்த தகவலின் பேரில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

இதுவரையிலும் 80 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், அதிகளவிலான பயணிகளை ஏற்றியதும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

120 பேரில் பலரும் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers