காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்: தமிழிசை

Report Print Kabilan in இந்தியா

காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்ததாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டது. மேலும், பிரதமர் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதால், காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ’காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம். கர்நாடக தேர்தலுக்காக உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம்.

இதுபோன்ற அரசியலை அனைத்து கட்சிகளும் செய்கிறது. கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜனின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers