செய்திதாளில் டீ போடும் அதிசய மனிதர்: நம்பினால் நம்புங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மத்தியபிரதேசத்தில் சந்தா கிராமத்தைச் சேர்ந்த அன்னுகா அன்னுபையா என்பவர் பேப்பர் பாத்திரத்தில் டீ போட்டுக்கொடுப்பது நம்பமுடியாத உண்மையாக இருக்கிறது.

12 வயதில் இருந்து டீக்கடையில் வேலை பார்த்து வரும் இவருக்கு, இவரது தந்தை இந்த வித்தையை கற்றுக்கொடுத்துள்ளார்.

டீ போடுவது குறித்து அவர் கூறியதாவது,

6 இஞ்ச் அகலமும், நீளமும் கொண்ட செய்தித்தாளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரம்போல் செய்து கொண்டு காற்றுபுகாத வகையில் காட்டுமுள்கள் கொண்டு நான்கு மூலைகளையும் குத்திவிட வேண்டும்.

இந்த வகையான பேப்பர் பாத்திரத்தைச் செய்வதற்கு அகாசியா தார்ன்ஸ், அம்பர்லா தார்ன்ஸ் வகையான முட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அந்தப்பாத்திரத்தை அந்த முட்கள் கொண்டு காற்றுப்புகாத வகையில் இணைத்து, பேப்பரும் நெருப்பில் எரிந்துவிடாமல் குத்திவைக்க வேண்டும்

அதன்பின் 60 மில்லி பாலை அந்த பேப்பர் பாத்திரத்தில் ஊற்றி, டீத்தூள், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துடீ தயாரிக்கலாம். ஆனால், வழக்கான அடுப்பிலும், நெருப்பிலும் இல்லை. மாறாக, கிராமங்களில் பயன்படுத்தப்படும் ஊதுகுழல் மூலம் மெல்லிதான நெருப்பு வரும் அடுப்பில் இந்தக் காகித பாத்திரத்தைவைக்க வேண்டும்.

அவ்வப்போது நெருப்பு மேலே வரும் வகையில் வாயின் மூலம் காற்றை செலுத்திபாத்திரத்தை சூடாக்க வேண்டும். அதிகமான நெருப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குத்தியிருக்கும் முட்கள் மூலம் நெருப்பு பட்டு சூடாகி, பாலும் சூடாகத்தொடங்கும். அதன்பின் பால் கொதிநிலையை அடைந்து, டீ தயாராகும். இந்த வகையான பேப்பர் பாத்திரம் மூலம் அதிகபட்சம் 70 மில்லிடீ தயாரிக்க முடியும். பால் கொதிநிலையை அடையும் போது, பாத்திரத்தை ஈரமாக்கும்.

அதைத் தவிர்க்கும்வகையில், அவ்வப்போது நெருப்பை அதிகமான கொண்டுவந்தால், காகிதப் பாத்திரம் ஈரமாகாது.

இதுபோன்று பேப்பர் பாத்திரத்தில் டீ போடும் முறையை நான் பொழுதுபோக்காகவே செய்து வருகிறேன். யாரேனும் ஸ்பெசலாக ஆர்டர் செய்தால் அவர்களுக்காகச் செய்து கொடுப்பேன்.

இதற்காக நான்யாரிடமும் பணம் வாங்குவதில்லை. ஏறக்குறைய 5 நிமிடங்களில் பேப்பர் பாத்திரத்தில் டீ தயாரிக்கமுடியும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers