கல்லூரி நிர்வாகம் கூறிய அந்த வார்த்தை: அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த மாணவன்

Report Print Raju Raju in இந்தியா
100Shares
100Shares
ibctamil.com

இந்தியாவில் ரூ.300-க்காக மாணவனை கல்லூரி நிர்வாகம் தெரிவு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மத்தியபிரதேச மாநிலம் சாத்னாவை சேர்ந்த மோகன்லால் அங்குள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென அவர் உயிரிழந்தார்.

இது குறித்து மோகன்லால் உறவினர்கள் கூறுகையில், மோகன்லால் தெரிவு கட்டணமாக ரூ.25,700 செலுத்தியிருக்கிறார். ரூ.300 குறைவாகச் செலுத்தியதாகக் கூறி அவரைக் கல்லூரி நிர்வாகம் தெரிவு எழுத அனுமதிக்கவில்லை.

இதனால் மன வேதனையில் காணப்பட்ட அவர் பதட்டமாகவும் இருந்தார்.

தேர்வெழுத முடியாததால் தனது எதிர்கால வாழ்க்கை பாழாகி விட்டது என்று புலம்பி கொண்டிருந்த நிலையில் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார் என்றனர்.

இதற்கிடையில் மோகன்லால் மரணத்துக்கு நீதி கேட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர் பொதுமக்கள்.

கல்லூரி நிர்வாகத் தரப்பினர் கூறுகையில், அவரது மரணத்துக்குத் தெரிவு கட்டணம் காரணமில்லை. கட்டணத்தை முழுமையாகத்தான் வசூல் செய்வோம். அப்படியிருக்கையில் 300 ரூபாய்க்காக தெரிவு எழுத அனுமதிக்கவில்லை என கூறுவது பொய்யானது என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்