தனுஷ்கோடி வரை வரும் இலங்கை செல்போன் சிக்னல்: தமிழக அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல், தனுஷ்கோடி வரை எட்டுவதாக தமிழக அமைச்சர் மணிகண்டன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு கேள்விகுறியாக அமைவதால், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரிடம் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இத்தகைய எல்லை தாண்டிய செல்போன் சிக்னலானது, கடத்தல் கும்பல்கள், கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers