என்னை விட்டுருங்க.... பாலியல் கும்பலிடம் கதறிய இளம்பெண்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
771Shares
771Shares
ibctamil.com

பீகாரில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சும் இளம்வயது பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பீகார் பொலிஸ் தலைமையகத்துக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருந்தது.

அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவரை, நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். அருகில் இருக்கும் இருவர் அதை வீடியோ எடுக்கின்றனர். இன்னொருவர் சிரித்துக்கொண்டு நிற்கிறார்.

அவர்களிடம் அந்தப் பெண், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி கதறி அழுகிறார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவரவில்லை.

அந்த வீடியோவில் பேசுபவர்கள், கயா பகுதியில் பேசுவதைப் போல இருப்பதால் அங்குள்ள பொலிசாருக்கு இதை அனுப்பி குற்றவாளிகளைப் பிடிக்க பொலிஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பீகார் மாநிலத்தில் இந்த வீடியோ கடந்த சில நாட்களாக பரபரப்பாக சுற்றி வருகிறது. பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அதோடு இந்த விவகாரத்தில் பொதுமக்களும் உதவ வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்