கணவனின் தகாத உறவு.... 7 வயது சிறுமியை கொன்ற பக்கத்துவீட்டு பெண்: பகீர் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
987Shares
987Shares
ibctamil.com

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கருமாண்டி செல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் - கனகா தம்பதியரின் மகள் தனிஷ்கா(7), அப்பகுதியில் இருந்த மரத்தடி ஒன்றின் கீழே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், தனிஷ்காவின் தந்தை சண்முகநாதன் குடிப்பழக்துக்கு அடிமையானதால், குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லை.

கனகாவின் நிலையைக்கண்டு வீட்டு செலவு, குழந்தையின் படிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்ட தேவைகளுக்கு, பக்கத்துவீட்டுக்காரர் கமலக்கண்ணன் என்பவர் உதவி வந்ததுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கமலக்கண்ணனுக்கும், அவரது மனைவி வனிதாவிற்கும் குடும்பத்திற்குள் சண்டை வெடித்துள்ளது. அத்துடன் தங்கள் மகனை கமலக்கண்ணன் சரியாக கவனிப்பது இல்லை என்று வனிதா, கமலக்கண்ணனுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தான் தனது கணவருடன் தகாத உறவு வைத்திருந்த கனகாவின் மகள் தனிஷ்காவை கொலை செய்துள்ளார் வனிதா.

குழந்தையை கொன்றதற்கான காரணம் வனிதா கூறியதாவது, தனது கணவர் என்னையும், எனது மகனையும் கண்டுகொள்வதே இல்லை என்றும், வருமானம் அனைத்தையும் தனிஷ்காவிற்கே செலவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக கணவர் கமலகண்ணனிடம் கேட்டபோது, அப்படித்தான் செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியும். முடிந்ததை செய்து பார் என்று கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தனிஷ்கா இருந்தால், பிற்காலத்தில் தானும், தன் மகனும் நடுத்தெருவிற்கு வந்துவிடுவோம் என எண்ணி, தனிஷ்காவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தேன்.

அதன்படியே, குழந்தையை கடைக்கு அழைத்துச்செல்வதாக ஆசைகாட்டி தூக்கிச்சென்று, கழுத்தை நெறித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள வனிதா, மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்