கர்நாடகா தேர்தல்! தமிழர் பகுதியில் தாமரை மலரவில்லையே? பாஜகவின் நிலை இதுதானாம்

Report Print Santhan in இந்தியா
177Shares
177Shares
lankasrimarket.com

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவில் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது.

அதிலும் கர்நாடகாவின் பெங்களுரில் பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்துள்ளது.

பெங்களூரின் காந்தி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் முன்னிலை வகிக்கிறார். சி வி ராமன் நகரில் பாஜக கட்சியின் எஸ் ராகு முன்னிலை வகிக்கிறார்.

சாந்தி நகரில் காங்கிரஸ் கட்சியின் என் எ ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார். புலிகேசி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகந்த ஸ்ரீனிவாச மூர்த்தி முன்னிலை வகிக்கிறார்.

சர்வக்ஞா நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் சிவாஜி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் முன்னிலை வகிக்கிறார்.

சிக்பேட் பகுதியில் மட்டும் பாஜக கட்சியின் உதய் பி கருடாச்சார் முன்னிலை வகிக்கிறார்.

கர்நாடகாவின் முதல்வராகிறார் எடியூரப்பா?

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்