ஆட்சி அமைக்கப் போகிறதா பாஜக? அவகாசம் அளித்த ஆளுநர்! அதிரடி திருப்பங்கள்

Report Print Santhan in இந்தியா
954Shares
954Shares
lankasrimarket.com

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றாலும், மஜதவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து பேசவிருந்தனர்.

இந்நிலையில் தாங்களே அதிகம் தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், பாஜக ஆட்சி அமைய வேண்டும் என கோரி ஆளுநரை சந்தித்தனர்.

முதல்வர் வேட்பாளரான எடியூரப்பான சந்தித்து பேசியதை தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மஜதவின் முதல்வர் வேட்பாளரான குமாரசாமி ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு- காங்கிரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயார் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கவுடாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சித்தாராமையா, கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கின்றோம், மஜத தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் கர்நாடக ஆளுநரை சந்திக்கும் சித்தாராமையா, மஜத-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளார்.

முதல் இணைப்பு- காங்கிரஸின் புது வியூகம்

கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் புது வியூகத்தை வகுத்துள்ளது.

அதாவது மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் 77 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுக்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற இருவரிடமும் சித்தாராமையா பேசி வருவதாகவும், கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக-வை ஆட்சியமைக்க விடாமல் கடைசிநேர முயற்சியாக காங்கிரசின் புது வியூகமாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்