விபத்தில் சிக்கி துண்டான ரசிகனின் கால்கள்: அனைத்து செலவுகளையும் ஏற்பதாக ரஜினி அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா
152Shares
152Shares
ibctamil.com

காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த போது ரசிகர் ஒருவரின் கால் விபத்தில் சிக்கி துண்டானதால், அதற்கான சிகிச்சை செலவுகள் அனைத்தையும் ரஜினி பார்த்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் தான் காலா, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 9-ஆம் திகதி சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ரஜினி உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டதால், இசை வெளியீட்டு விழாவை பார்ப்பதற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு சென்றிருந்தனர்.

அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்ற ரசிகர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு முடிந்த பின் வீடு திரும்புவதற்காக இரயிலில் சென்றுள்ளார்.

அப்போது இரயில் மிகவும் கூட்டமாக இருந்ததால், இவர் இரயிலின் படியில் அமர்ந்து பயணித்துள்ளார்.

நள்ளிரவு 2.30 மணிக்கு மறைமலை நகர் இரயில் நிலையம் வரும்போது காசி விஸ்வநாதன் தூங்கிவிட்டதால், வேகமாக இரயில் நிலையத்தில் இரயில் நுழைந்த போது பிளாட்பாரத்தில் காசி விஸ்வநாதனின் கால் உரசியது.

இதனால் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இரண்டு கால்களும் சிதைந்து போனதால் இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினர்.

இதையடுத்து அவர் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் எப்படியோ ரஜினியின் காதுக்கு செல்ல, உடனடியாக அவர் தனது ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசி விஸ்வநாதனை சந்தித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர், மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான முழுச் செலவை ரஜினிகாந்த் ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், நீ குணமான பின்னரும் உனக்கு தேவையான உதவிகளை ரஜினி வழங்குவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்