பிரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை பலி: தூக்கி வீசப்பட்ட பரிதாபம்

Report Print Santhan in இந்தியா
272Shares
272Shares
ibctamil.com

தமிழகத்தில் பிரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலபாக்கம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கால் டாக்ஸி டிரைவரான இவருக்கு செல்வி என்ற மனைவியும், தஷிகா மற்றும் பிரதீஷ் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று பிரதீஷ் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த பிரிட்ஜின் அருகே சென்றுள்ளார்.

இதை யாரும் கவனிக்காத காரணத்தினால், பிரதீஷ் திடீரென்று தூக்கி வீசப்பட்டார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த வீட்டில் இருந்தவர்கள், உடனடியாக குழந்தையை கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிரதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், விளையாடிக்கொண்டிருந்த பிரதீஷ், பிரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியைத் தொட்டுள்ளார், அதில் மின் கசிவு இருந்துள்ளதால், மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்