கணவனின் நண்பருடன் தவறான தொடர்பு: மனைவி செய்த கொடூர செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1405Shares
1405Shares
lankasrimarket.com

தவறான தொடர்பு காரணமாக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.

அண்ணாநகர் கிழக்கு விஓசி காலனியை சேர்ந்த கோபி - சுமித்ரா தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டில் இறந்துகிடந்த கோபியின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் கோபியின் மனைவி சுமித்ராவை துருவித் துருவி விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில் சுமித்ரா கோபியை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோபிக்கு மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. அவரது நண்பர் கலைச்செல்வனுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இதில் கோபிக்கும், எனக்கும் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனோடு எனக்கு தவறான உறவு ஏற்பட்டது. கோபி இல்லாத சமயங்களில் இருவரும் சந்தித்தோம்.

இந்த விவகாரம் கோபிக்கு தெரிந்த எங்களை கண்டித்தார்.

என்னுடன் உறவைத் தொடர வேண்டும் என்பதற்காகவே கலைச்செல்வன், கோபிக்கு அதிக அளவில் மது வாங்கில் கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கினார்.

கணவன் கோபியைக் கொன்றுவிட்டால் தடையின்றி இருவரும் வாழலாம் என்று சுமித்ரா கூற அதை செயல்படுத்தியுள்ளார் கலையரசன்.

நேற்று வழக்கம் போல் பணி முடிந்து வந்த கோபியை மதுக்கடைக்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன் அளவுக்கதிமாக மது வாங்கிக் கொடுத்துள்ளார். போதையில் வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கவைத்த பின் துண்டை வைத்து கோபியின் கழுத்தை இறுக்கி கலைச்செல்வன் கொலை செய்துள்ளார்.

கோபியை கொலை செய்த கலைச்செல்வன், சுமித்ரா இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்