சிம்பு ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை: உதவிய பொலிஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா
220Shares
220Shares
ibctamil.com

சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் கடந்த வாரம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மதனின் குடும்பத்தை நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் குமரேசன் தரப்புக்கும் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்த மதன் தரப்புக்கும் எப்போதும் பிரச்சனை இருந்துகொண்டே இருந்தது.

யார் தாதா என்பதில் போட்டி. மயிலாப்பூர் வட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவர் என்பதோடு, ஆளும் கட்சி பிரமுகரின் மகன் ஆவார்.

இந்நிலையில், கடந்த வாரம் திருமணத்துக்கு பேனர் வைத்ததில் ஏற்பட்ட தகராறில், குமரேசன் தரப்பினர் 6 பேர் சேர்ந்து மதனை ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.

இதில், கொலைகுற்றத்தில் ஈடுபட்ட 6 பேரும் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் தலைமறைவாவதற்கு பொலிசார் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மகன் சிம்புவின் ரசிகர் மன்ற தலைவர் மதன் என்பதால், அவருடைய குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் டி.ராஜேந்தர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்