ஒரு எம்எல்ஏ-க்கு ரூ.100 கோடி பேரம்: பாஜக மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in இந்தியா

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இன்று கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்த நிலையில், ஆளுநரை சந்தித்து பாஜக முதல்வர் வேட்பாளர் ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் மொத்தம் 78 பேரில் 66 பேர் மட்டும் கலந்து கொண்டதாகவும், மற்ற 12 பேர் மாயமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே தங்களது எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க ஒரு எம்எல்ஏ-க்கு 100 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இரண்டு கட்சிகளிடம் இருந்து எங்களிடம் பேரம் பேசினார்கள், கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் பாஜகவுடன் நான் சேர்ந்தது என் தந்தையின் அரசியல் வாழ்வில் கருப்பு புள்ளியானது.

தற்போது அதை போக்கவே காங்கிரசுடன் இணையவுள்ளேன், எங்கிருந்து வந்தது இந்த கருப்பு பணம்? இவர்கள் தான் ஏழை மக்களுக்காக பாடுபவர்களா? எங்கே சென்றார்கள் வருமான வரித்துறையினர்?

பாஜகவிடமிருந்து விலகி வரும் எம்எல்ஏகளை வரவேற்கிறேன், குதிரை பேரத்தை ஆதரிக்கும் வண்ணம் ஆளுநரின் முடிவு இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்