13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை மணந்த விவகாரம்: இணைந்து வாழ்வது குறித்து முடிவு

Report Print Raju Raju in இந்தியா
984Shares
984Shares
lankasrimarket.com

இந்தியாவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது பெண்ணுக்கும் திருமணமான நிலையில் சிறுவனுக்கு 21 வயது ஆனவுடன் அவர் மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்ரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த 27-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில் அந்த ஊரின் இணை ஆட்சியர் ராமசாமி, சிறுவர் மற்றும் மகளிர் நலத் துறையின் உதவியாளர் விஜயா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இந்த திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என கூறினார்கள்.

இந்நிலையில் ஆட்சியர் சத்யநாராயணா முன்னிலையில் புதுமண தம்பதிகள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ஆட்சியர், இந்த திருமணம் தற்போது செல்லாது, சிறுவனுக்கு 21 வயது ஆன பின்னர் மனைவியுடன் அவர் சேர்ந்து வாழலாம்.

அதுவரை சிறுவன் அவன் வீட்டிலும், அவன் மனைவி அவரது பெற்றோருடனும் தான் தங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்