+2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

Report Print Kabilan in இந்தியா
75Shares
75Shares
ibctamil.com

+2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை +2 தேர்வு முடிவுகள் வெளியாகின, மொத்த தேர்ச்சி விகிதம் 91.1 சதவிகிதமாகும்.

மாணவி தற்கொலை முயற்சி

விழுப்புரத்தின் கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூர் கிராமம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் இளமதி.

இன்று வெளியான +2 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்ததும், மனமுடைந்த இளமதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த கச்சிராப்பாளையம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி, அறிவழகன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலும் பிரியா என்ற மாணவி, குறைவான மதிப்பெண் பெற்றதால் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்