நாளை பதவியேற்பு விழாவுக்கு வாருங்கள்! தீயாய் பரவும் தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா
73Shares
73Shares
lankasrimarket.com

கர்நாடகாவில் நாளை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தொண்டர்களுக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.

கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், பாஜக ஆட்சியை பிடிக்க போட்டி போட்டு வருகின்றன.

இன்றும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடியூரப்பா நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நாளை பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு எடியூரப்பா தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாளை ஆளுநர் மாளிகைக்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காங்கிரஸ்- மஜத எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்