கர்நாடக தேர்தல்: தவறாக கருத்து தெரிவித்து வசமாக மாட்டிக்கொண்ட எச்.ராஜா

Report Print Deepthi Deepthi in இந்தியா
279Shares
279Shares
ibctamil.com

1966-இல் வாஜ்பாய் ஆட்சி அமைத்ததாக தவறான பதிவை டுவிட்டரில் போட்டுவிட்டு அதற்காக நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

1966 ல் பாஜக என்ற கட்சியே உதயமாகவில்லை. அப்படியிருக்கையில் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில், இப்படி உளறுகிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது. அதுபோல் பாஜகவும் 108 இடங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மை என்று கூறி ஆட்சி அமைக்க கோருகிறது.

ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், மற்ற கட்சிகளுடன் கைகோத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது அதே பார்முலாவை பயன்படுத்தும் காங்கிரஸை மட்டும் குறை கூறுகிறது.

எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், 1966 ல் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் வாஜ்பாய் அவர்களை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தது போல் கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியின் தலைவர் BSY அவர்கள் ஆட்சி் அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த டுவிட்டை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்