மனைவியின் படுக்கை அறையில் ரகசிய கமெரா பொருத்திய கணவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
531Shares
531Shares
lankasrimarket.com

மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கமெரா பொருத்திய கணவன் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீபக்- ரம்யா தம்பதியினருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். வெளிநாட்டில் பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தீபக், கடந்த 8 மாதங்களுக்கு முன்னர்தான் இந்தியா திரும்பியுள்ளார்.

இந்நிலையில், 8 மாதங்கள் மனைவியுடன சேர்ந்து வாழ்ந்த இவர், கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், தனது மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போதும் ரம்யாவின் வீட்டுக்கு வருவார்.

இதன்போது, தனது மனைவியின் மீது தீபக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதனால், மனைவியின் படுக்கை அறையில் இருந்த நீர் தூய்மைப்படுத்தும் இயந்திரத்தில் உளவு கமெரா ஒன்றை ரகசியமாக வைத்துள்ளார்.

இந்த கமெராவை கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, கணவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்