தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் கொள்ளையடித்த கும்பல்

Report Print Trinity in இந்தியா
70Shares
70Shares
ibctamil.com

சென்னையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியிடம் (வயது 80) வருமான வரி துறை என்று பொய் சொல்லி கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் நீலா என்னும் மூதாட்டி. தனது இரு மகன்களும் திருமணமாகி தனி தனியே வாழ்ந்து வரும் நிலையில் இவரும் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

இதை பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் மூதாட்டி வீட்டில் நுழைந்து தங்களை வருமானவரி துறையினர் என்று கூறியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் அவரது மூத்த மகன் வெங்கடேஷை வருமானவரி ஏய்ப்பு விஷயமாக கைது செய்துள்ளதாகவும் கூறி உள்ளனர். மேலும் அவரது பணத்தை பறிமுதல் செய்ததாகவும் கூறியுள்ளனர்.

இதை கேட்டதும் வயதான அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனது மகன் நல்லவன் என்றும் அவனை விட்டு விடுங்கள் என்றும் புலம்பியுள்ளார். அவரது வயதையும் நிலையை பற்றியும் கவலைப்படாத கொள்ளை கும்பல் அவரிடம் பீரோ சாவியை மிரட்டி வாங்கியுள்ளது. அதில் இருந்த ஒற்றை 500 ரூபாய் தாளையும் விட்டுவைக்காமல் எடுத்து கொண்ட கொள்ளை கும்பல் மூதாட்டி நீலாவை மிரட்டி அவரது சங்கிலி வளையல் உள்பட 8.5 பவுன் நகைகளை வாங்கியிருக்கிறது.

என் நகையை ஏன் எடுக்கிறீர்கள் இது நாங்கள் சம்பாதித்து வாங்கியது என்று அழுதிருக்கிறார். உங்கள் மகன் வரி ஏய்ப்பு செய்து சம்பாதித்ததில்லை என்று உறுதியானபின் இந்த நகைகளை திருப்பி தருகிறோம் என்று கூறியுள்ளனர். பின்னாடியே வந்த மூதாட்டியை வீட்டுக்குள் பூட்டி கதவை தாளிட்டு விட்டு கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். பாட்டி போட்ட சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை திறந்து விட்டிருக்கின்றனர். அதன்பின் காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் அங்குள்ள cctv கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் கொள்ளையர்கள் விரைவில் பிடிபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்