56 மணிநேரத்தில் கர்நாடக முதல்வர் நாற்காலியை இழந்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியை 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

குறிப்பாக, ஆளும் காங்கிரசுக்கு 78 இடங்கள் மட்டுமே கிடைத்தது. பாஜ 104 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 38 இடங்களும், இதர கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்தன.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை சேர்ந்த எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார்.

15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் தனது பதவியை சட்டசபையில் வைத்து ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

பதவியேற்ற 56 மணிநேரத்தில் முதல் நாற்காலியை நழுவவிட்ட எடியூரப்பாவின் சொத்து மதிப்புகள் இதோ,

தேர்தலின் போது தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்த எடியூரப்பா தனக்கு மொத்தமாக 4.09 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே 2013-ம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாயாகவும், 2014-ம் ஆண்டு 6.9 கோடி ரூபாயும் இருந்ததாகத் தரவுகள் கூறுகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் எடியூரப்பாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறைந்தது மட்டுமில்லாமல் கடனும் அதிகரித்துக் காணப்படுகிறது.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது 15,26,828 கோடி ரூபாய் வருவாய் என்று குறிப்பிட்ட எடியூரப்பாவின் வருவாய் 2018-ம் ஆண்டு 12,33,313 ரூபாயாகக் குறைந்துள்ளது.

2014-ம் ஆண்டுத் தனது வசம் 7,71,000 ரூபாய் பணம் உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்த எடியூரப்பா 2018-ம் ஆண்டுத் தனது வசம் 1,01,145 ரூபாய் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்கியில் சேமிப்பாக 16,60,174 ரூபாய் வைத்துள்ளதாகவும், பிக்சட் டெபாசிட்டில் 18,08,321 ரூபாய் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அசையும் சொத்து 71,300,40 ரூபாய் என்றும் அசையா சொத்தில் விவசாய நிலத்தின் மதிப்பு 53,74,875 ரூபாய் என்றும், வணிக வளாகத்தின் மதிப்பு 68,788,30 ரூபாய் என்றும், நகையாக 1.09 கோடி ரூபாயும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு இவர் தனக்கு 11,09,640 ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம், வணிகக் கட்டடங்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் அசையும் சொத்துக்களில் 1,91,33,447 ரூபாயும், அசையா சொத்துக்களாக 4,90,12,820 ரூபாய் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers