இப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்: கொதித்தெழுந்த நடிகர் சிம்பு

Report Print Raju Raju in இந்தியா

நம் நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார் என்றே நமக்கு தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

நடிகர் விவேக் நடித்துள்ள எழுமின் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நம் நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார் என்றே நமக்கு தெரியாது, அப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.

என் கட் அவுட்களுக்கு இனி பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். உயிரை பறிக்கும் விடயங்களை இனி என் ரசிகர்கள் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சிம்புவின் ரசிகர் மதன் என்பவர் பேனர் வைத்த தகராறில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்