தமிழகத்தில் கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி, இரத்த வெள்ளத்தில் உடல்கள்: பிரபல இயக்குனரும் கைது

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. மேலும் தனியார் ஆட்டோ, போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

பேரணி திடீரென கலவரமாக மாறிய நிலையில் ஆட்சியர் அலுவலக கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முதலில் பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியானதாக தகவல் வந்துள்ளது.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கவுதமன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்