தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் படுகாயம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் படுகாயமடைந்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட பெண் பொலிசாரின் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட ஜூடிகேமா பாக்கியராசு அவர்களுக்கும் துப்பாக்கிசூட்டில் பலத்தகாயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறை நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலை நாம் தமிழர் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers