தூத்துக்குடியில் தேடி தேடி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதன் காரணமாக தற்போது வரை 11-பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களை நோக்கி பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தேடி தேடி சுடுவது போன்று இருப்பது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்