மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொடூரமாக கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை துப்பாக்கியால் பலமுறை சுட்டு கொன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தர்மேஷ் ஷா (50) என்ற தொழிலதிபர் தனது மனைவி அமிபென் மற்றும் மகள்களான ஹிலி (21), குஷி (18) ஆகியோரிடம் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தன்னிடமிருந்த கை துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் மகள்களை ஷா சுட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது நண்பருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நண்பர் ஷா வீட்டுக்கு வந்த நிலையில் தற்கொலை செய்யாத அவர் வீட்டில் அமைதியாக இருந்துள்ளார்.

பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற ஷா அங்கு சரணடைந்துள்ளார்.

பொலிசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனக்கு 15 கோடி கடன் இருந்ததாகவும் அதை குடும்பத்தாரிடம் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், மூத்த மகளான ஹலியை மேற்படிப்புக்காக 70 லட்சம் செலவழித்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப மனைவி முடிவு செய்ததால் ஆத்திரத்தில் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers