தகுதியற்ற எடப்பாடியே வீட்டுக்கு போ! தூத்துக்குடி விவகாரத்தில் கொதித்த பிரபல கொமடி நடிகர்

Report Print Raju Raju in இந்தியா

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் கருணாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள சுற்று பகுதி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் பொலிசார் அங்கு நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுத்து வருகின்றன.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் கருணாகரன் டுவிட்டரில் தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அதில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தி அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

நமது முதல்வரை நமக்கு முதல்வராக இருக்க நாம் தெரிவு செய்யாததன் விளைவு தான் இது.

தகுதியற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்களே தயவு செய்து 10 லட்சத்தை நஷ்ட ஈடாக வாங்கி கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் என பதிவுட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்