ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவலா? திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

துாத்துக்குடி முற்றுகை போராட்டக்காரர்களுடன், மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஊடுருவியிருப்பதை பொலிசார் கண்காணிக்க தவறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள்.

போராட்டமானது குமரெட்டியாபுரம், மீளவிட்டான் என, 17க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது குறிப்பாக, புற்றுநோயால் குடும்ப தலைவர்களை இழந்த குடும்பங்களை ஒன்றிணைத்தனர்.

கடந்த, 100 நாட்களாக நடந்த போராட்டம் இதுவரை போராட்டத்தையே பார்த்திராதவர்களிடம் புதிய போக்கை ஏற்படுத்தியது.

மேலும், தி.மு.க., - அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்திராமல் மக்கள் அதிகாரம், புரட்சிகர மக்கள் முன்னணி போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்கள், போராட்ட களத்தில் இறங்கின.

நேற்றைய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில், ஜெயராமன் மக்கள் அதிகாரம் அமைப்பையும், தமிழரசன் புரட்சிகர மக்கள் முன்னணி அமைப்பையும் சேர்ந்தவர்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், இளைஞர்களிடம் தீவிர இடதுசாரி அமைப்புகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

நேற்றைய சம்பவத்திலும், இத்தகைய அமைப்பினர் ஊடுருவியதை கண்காணிக்க பொலிசார் தவறிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers