தமிழகத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிஸ்காரர் இவரா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிசார் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தற்போது வரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிசார் ஒருவர் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

அவரின் பெயர் ராஜ தீலிபன் எனவும், இவர் மட்டும் நேற்று 6 பேரை சுட்டுத் தள்ளியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் தூத்துக்குடி கலெக்டர் அருகில் இருப்பது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers