தூத்துக்குடி கலவரம் எதிரொலி: சென்னை மெரினாவில் நடந்த அதிரடி மாற்றம்

Report Print Raju Raju in இந்தியா

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் சென்னை மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை மெரினாவில் போராட்டம் நடக்கலாம் என பொலிசார் நினைக்கிறார்கள்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

3 இணை ஆணையர்கள் தலைமையில் 2000 பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers