11 உயிரிழப்புகளுக்கு பின்பும் எப்போதும் போல இயங்கும்: ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் அறிவிப்பு

Report Print Trinity in இந்தியா

இத்தனைக்குப் பின்பும் எப்போதும் போல ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது என்று சிஇஓ ராம்நாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வன்முறை சம்பவத்திற்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தின் சிஇஓ ராம்நாத் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஆலை எப்போதும் போல இயங்கி வருகிறது என்று கூறியுள்ளது எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல அமைந்துள்ளது.

தூத்துக்குடியில் அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஸ்டெர்லைட் ஆலை நடவடிக்கை எடுத்ததாகவும் அதற்காகவே 144 தடையுத்தரவை தாங்கள் அரசிடம் பெற்றதாகவும் ராம்நாத் கூறியிருக்கிறார்.

நேற்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட களம் போர்க்களமாக மாறி காட்சி அளித்ததையும் அதன் மூலம் பத்துக்கும் மேற்பட்டோர் பலியானதையும் அனைவரும் வேதனையோடு அறிந்திருப்போம்.

அப்பாவி பொதுமக்களை ஸ்னைப்பர்கள் மூலம் மார்பு பகுதியை நோக்கி குறிவைத்து சுடப்பட்ட விடயமும் அதில் காணப்பட்ட காணொளியில் யாராவது ஒருவராவது செத்துருப்பாங்க என்ற காவல்துறையின் கொடூரம் தோய்ந்த பின்னணி குரலும் காலத்திற்கும் ஆறாத காயத்தின் சாட்சியாக இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இது பற்றி ஸ்டெர்லைட் ஆலை CEO ராம்நாத் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போது தாங்கள் 144 தடையுத்தரவை அரசிடம் இருந்து பெற்றதாகவும் அதனையடுத்து மக்களிடம் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் இவர் கூறியுள்ள நிலையில் தற்போது அனைத்து விதிகளையும் பின்பற்றி "எப்பொழுதும் போல" ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருவதாய் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...